ஆர்வர்டு தமிழிருக்கைக்காக ஆதரவு நல்கிய உலகத்தமிழர் அனைவருக்கும் எங்களது வணக்கம். கோவிட்19 தொற்று நோய் பரவிவரும் இந்த நேரத்தில் நீங்களனைவரும் உடல்நலத்துடனும், பாதுகாப்புடனும் இருக்கிறீர்களென்ற நற்செய்தியைக் கேட்க விரும்புகிறோம்.
நாங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்ததுபோல் ஆர்வர்டு பல்கலைக்கழகம் தமிழிருக்கைக்கான பேராசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பணியைத் தொடங்கிவிட்டிருந்தனர். அதற்கான தேடுதல் பணிகளுடனேயே ஆண்டுக்கு இரண்டு முறையாவது பொதுமக்கள் கலந்துகொள்ளும் தமிழறிஞர்களுடைய தமிழாராய்ச்சியுரைகளையும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் கோவிட்19 தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் இன்றியமையாத பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன இரண்டு பணிகளிலும் தொய்வேற்பட்டிருக்கிறது அல்லது பயணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் தமிழர்கள் மனச்சோர்வடைந்திட வேண்டாம், தமிழிருக்கைக்கான பொருத்தமான அறிஞரைத் தேர்ந்தெடுப்பதில் முனைப்புடன் இருப்பதாக ஆர்வர்டு பல்கலைக்கழகம் மீண்டும் உறுதியளித்துள்ளது. ஆர்வர்டு பல்கலைக்கழகத்துடன் இடையறாமல் தொடர்பிலிருந்து வருகிறோம். நற்செய்தியோ அல்லது மாற்றங்களோ இருப்பின் உடனுக்குடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்..
Vanakkam, on behalf of Tamil Chair Inc, we extend our best wishes to all those who supported the establishment of a Tamil Chair at Harvard University. At this time of Covid19 pandemic, we wish to hear the good news about your good health and safety as the topmost priority.
As we announced in the beginning of this year, Harvard University has started the search process to find the suitable scholar for Harvard Tamil Chair. In addition to this search process Harvard also promised to conduct at least two public seminars on Tamil research by Tamil scholars. However, due to the travel restrictions and other issues related to the pandemic, both these activities have been severely impacted or delayed.
Further, Harvard University has reiterated its commitment to fulfill the position with the most qualified scholar. We are in constant touch with Harvard and will update the public as and when we receive any updates from them.
Thank you for your cooperation & support
Board, Tamil Chair Inc.
Toronto Tamil Chair
The governing council of the University of Toronto and Tamil Chair Inc. and the Canadian Tamil Congress affirm their mutual commitment to the creation of a Chair in Tamil Studies at the University of Toronto.
Thirumoolar Tamil Chair for Yoga Research
We are keen in establishing a Tamil Chair at a Medical University to encourage research on the clinical applications of Yoga methods from our ancient Siddha tradition.
Robin E. Kelsey
Dean of Arts and Humanities
Shirley Carter Burden Professor of Photography
University Hall, Second Floor North
Cambridge, MA 02138
13 January 2020
Dr. Vijay Janakiraman
President, Tamil Chair, Inc.
Dear Dr. Janakiraman,
It was a great pleasure to meet with you in December. I am writing a brief note to follow up on our conversation, and specifically to affirm the enthusiasm with which we have embarked on the preliminary steps toward filling the Tamil Chair. As we discussed, Jay Jasanoff, Diebold Professor of Indo-European Linguistics and Philology and Chair of the Department of South Asian Studies, has initiated a canvass of the field that will provide us with a strong basis for the search, which we hope to launch officially later this year. The filling of this Chair will be a landmark event for Harvard, and we expect that the inaugural occupant to lead Tamil studies at this institution for many years to come. For that reason, we are proceeding with our customary care. As our momentum builds, I want to thank you and the great many contributors to the establishment of this Chair again for your foresight and generosity. The study of Tamil literature and Harvard University will be markedly stronger for your inspiring commitment and magnanimous efforts.
Sincerely,
Robin E. Kelsey
Burden Professor of Photography
Dean of Arts and Humanities
ஹார்வர்ட் தமிழ் இருக்கை நன்கொடையாளர்களுக்கும், தேமதுர வாசகர்களுக்கும் வணக்கம், வாழ்த்துக்கள்!
மே மாதம் 5 ஆம் நாள், நானும், சம்பந்தம், சங்கர், ஆகியோர் முனைவர் செல்வகுமார் அவர்கள் தலைமையில், ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகிகளை சந்தித்தோம். தென்னாசிய துறையின் தலைவர் திரு.சுனில் அம்ரித் ,நீனா சிப்செர்(Nina Zipser, Dean of Faculty Affairs and Planning), பேராசிரியர் விட்சல், பரிமள், மற்றும் நிர்வாகி குரோன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர். உங்களின் எண்ணங்களையும், பரிந்துரைகளையும் பிரிதிபலிக்கும் கோரிக்கைகளை அவர்களிடம் அளித்தோம். உடனேயே தமிழ் இருக்கைக்கு,பேராசிரியரை தேடும் பணி தொடங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
தமிழ் இருக்கைக்கு தேவையான ஆறு மில்லியன் டொலர்களை எட்டும் மீதித் தொகையினை காசோலையாக அளித்து நம் கடமையினை நிறைவேற்றிவிட்ட மகிழிச்சியுடன் நிர்வாகத்தினரிடம் விடை பெற்றோம்.
இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
அன்புடன்
ஜானகிராமன்.
தலைவர், தமிழ் இருக்கை குழுமம்.
ஹார்வர்டு தமிழிருக்கைக்கு எதிரான வதந்திகள் பொய்யானவை
செயற்குழு, தமிழ் இருக்கைக் குழு
(மார்ச் 11, 2018)
தமிழ் இருக்கைக் குழு பற்றியும், ஹார்வர்டு பல்கலைக்கழகம் பற்றியும் ஊடகங்களிலும் தமிழ் தொடர்புடைய ஆங்கில இணையதளங்களிலும் சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவற்றுக்கு சிறிதேனும் உண்மைத்தன்மை கிடைக்கச் செய்யும் என்பதால் அவற்றை ஹார்வர்டு பல்கலைக்கழகமும் தமிழ் இருக்கைக் குழுவும் கண்டுகொள்ளவே போவதில்லை. ஆனால் நன்கொடையாளர்கள் நடுவேயும் தொடர்ந்து வதந்திகளையொட்டிய கேள்விகளை எழுப்பப் படுவதால் அவர்களுக்காக தமிழ் இருக்கைக் குழு இந்த ஒருமுறை மட்டும் சிறுவிளக்கத்தைத் தர கடமைப்பட்டுள்ளது. முதலில், வதந்திகளைத் திட்டமிட்டு உருவாக்குபவர்கள் தனிப்பட்ட உள்நோக்கங்களுக்காகவோ அல்லது நீண்டநாளைய அரசியல் காரணங்களுக்காகவோ இதைச்செய்கிறார்கள். அவர்களுடைய தனிப்பட்ட கடந்தகாலச் செயல்களின் நம்பகத்தன்மையையும், நீண்டகால அரசியல் பின்னணியையும் இணையத்தில் கூர்ந்து தேடினாலே அறிந்து கொள்ளலாம். அதன் மூலம் அவர்கள் ஏன் பொய்களை உண்மைகளாகக் கற்பிக்க முயல்கிறார்களென்று புரிந்தும் கொள்ளலாம். அரசியல் காரணங்களுக்காகச் செய்பவர்கள் முன்பு கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலைக் கழகத்தில் இருக்கும் தமிழ் இருக்கை பற்றியும் பரப்பிய இதுபோன்ற பொய்கள் சான்றுகளில்லாமையால் அறிவுலகத்தால் நிராகரிக்கப் பட்டுள்ளன. அடுத்து, ஹார்வர்டு பல்கலைக் கழகம் பற்றி பரப்பப்படும் பொய்கள் பற்றிப் பார்ப்போம். 1. தமிழரை ஏமாற்றிப் பெரிய அளவில் நன்கொடை பெற்று தம்முடைய வணிகத்துக்குப் பயன்படுத்துகிறது, 2. தமிழர் வரலாற்றையும், இந்திய வரலாற்றையும் மேற்கத்தியப் பார்வையில் திரித்து வெளியிடும் நோக்கில் தமிழ்த் துறையை உருவாக்குகிறது.. 3. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சீன அரசு சீன மொழிக்கான இருக்கையை தன் முழுக்கட்டுப்பாட்டில் இருக்குமாறு உருவாக்கியது, ஆனால் தமிழர்கள் ஏமாற்றப்படுவார்கள். ஹார்வர்டு பல்கலைக் கழகம் உலகின் பல்கலைக் கழகங்களில் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஏழாண்டுகளாகத் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருக்கிறது (2007 ஆம் ஆண்டு அனைத்துலக ஊடகங்களிலும் வெளியான சான்று இங்கே:
https://www.wsj.com/articles/academics-rank-harvard-no-1-in-reputation-1497456035.
இது அமெரிக்காவில் அல்லது மேற்கு நாடுகளில் மட்டுமே எடுக்கப் பட்ட கணிப்பு அல்ல. 137 நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 10500 ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இப்படிப் பட்ட முதலிடத்தை அடைய வேண்டுமெனில் ஒரு பல்கலைக் கழகத்திற்கென்று சில அடிப்படைப் பண்புகளும், கட்டமைப்பும் தேவை. வெளியிலிருந்து கொடுக்கப் படும் எந்தவித அரசியல் அழுத்தங்களும் இல்லாமை, ஆசிரியர், மாணவர் சேர்க்கைகளில் கடைப் பிடிக்கப்படும் நேர்மை மற்றும் சார்பின்மை, ஆசிரியர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் திறமை அடிப்படையில் தொடர்ந்து எடைபோடும் தரக்கட்டுப்பாடுகள், மேற்கொள்ளப் படும் ஆராய்ச்சிகள் உலகின் சக ஆராய்ச்சியாளர்களால் ஏற்கப்படும் உயர்வு என முக்கியமான சிலவற்றைக் குறிப்பிடலாம். எனவே, ஹார்வர்டு பொய்யாக வரலாற்றைத் திரிக்கிறது என்பதை விட தமிழர் வரலாற்றையும், இந்திய வரலாற்றையும் அரசியல் நோக்கத்துடன் சில போலி ஆராய்ச்சியாளர்கள் திரிப்பதைச் சான்றுகளுடன் ஹார்வர்டு பல்கலைக் கழகம் எதிர்கொள்கிறது என்பதே உண்மை. (மேலும், அரசியல் நோக்கத்துடன் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும், பிற பல்கலைக் கழகங்களிலும் இருக்கைகளை உருவாக்குவதை அடையாளங்கண்டு எதிர்த்து வருகிறார்கள் நேர்மையான ஆராய்ச்சியாளர்கள்). எந்த வதந்திகளையும் சட்டை செய்யாமல் ஹார்வர்டு தன்னுடைய தரத்தை முதலிடத்தில் தொடர்ந்து நிறுத்தி வருகிறது என்ற ஒன்றே போதும் இவை போன்ற வதந்திகள் நிராகரிக்கப் படவேண்டியவை என்பதற்கு. பெரும் ஊடகங்களில் சிலரால் அதிரடியாக முன் வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சட்டரீதியிலும் ஹார்வர்டு எதிர்கொள்கிறது. அடுத்து, சீன மொழிக்கான இருக்கையை சீன அரசு உருவாக்கியது என்பது முழுப்பொய். அது சீன அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது அதைவிட பெரிய பொய். ஹார்வர்டு பல்கலைக்கழகம் மட்டுமல்ல அமெரிக்காவின் எந்தப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயல்பாடுகளையும் அமெரிக்க அரசாங்கமே கூட கட்டுப்படுத்த முடியாது. பல்கலைக் கழகங்கள் பலவும் தம்முடைய சுதந்திரமான இயக்கத்துக்குத் தடையாக இருக்கும் அரசின் கொள்கைகளை வெளிப்படையாக எதிர்க்கும் சுதந்திரம் உண்டு. எடுத்துக்காட்டாக அண்மையில் டோனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் குடிபெயர்ச்சிக் கொள்கையை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமான அறிக்கைகளை வெளியிட்டன என்பதைக் குறிப்பிடலாம்.
(https://hls.harvard.edu/content/uploads/2017/06/Offensive-and-Unconstitutional-Legal-and-Political-Strategies-for-Defeating-President-Trump%E2%80%99s-Muslim-Immigration-Ban-by-Nathan-MacKenzie.pdf)
மூன்றாவதாக, தமிழ் இருக்கைக் குழுவைப் பற்றிய வதந்திகளைப் பார்ப்போம். 1. ஹார்வர்டு பல்கலைக்கழகம் தமிழ்த் துறை உருவாக்க தம் பணத்தைச் செலவழிக்காமல் தமிழர்களிடம் ஏமாற்றி நிதிதிரட்டுவதற்காக தமிழ் இருக்கைக் குழுவை உருவாக்கியுள்ளது. 2. மருத்துவர்கள் தம் பிள்ளைகளையோ, குடும்பத்தினரையோ ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சேர்க்க நன்கொடை அளித்து நிதி திரட்டுகிறார்கள். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தம் பெயரிலும், குடும்பங்களின் பெயர்களிலும் இருக்கைகளை ஏற்படுத்தப் பெரும் செல்வந்தர்களும், அறக்கட்டளைகளும் முழுத் தொகையுடன் தயாராக காத்திருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க, தமிழர்களிடம் நன்கொடை திரட்டி ஹார்வர்டு தம்முடைய நோக்கத்தைச் செயல்படுத்த எந்த முகாந்திரமுமில்லை. தமிழ் இருக்கைக் குழுதான் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை அணுகி தமிழுக்கு இருக்கை வேண்டுமென வேண்டுகோள் விடுத்தது. மேலும், அரை மில்லியன் நன்கொடை கொடுத்தெல்லாம் ஹார்வர்டில் பிள்ளைகளுக்கு இடம் வாங்க முடியாது. மருத்துவர்கள் இருவர் குடும்பங்களிலும் யாரும் அந்தச் சூழ்நிலையிலுமில்லை. தமிழர்தம் வரலாற்றிலேயே முழுநேரம் கடினமாக உழைத்து ஊதியமாக ஈட்டிய பொருளிலிருந்து இவ்வளவு பெரிய நன்கொடையைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக யாரும் அளித்ததில்லை. அவர்களுடைய உயர்ந்த நோக்கத்தைச் சிறுமைப் படுத்த இதைவிட வேறு பொய்யில்லை. இறுதியாக, 1. தமிழர்களின் தொன்மையான ஓலைச் சுவடிகளையும், பிற சான்றுகளையும் திருடித் தம்மிடம் வைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது ஹார்வர்டு. 2. தமிழ் நாட்டிலும், இந்தியாவிலுமுள்ள தொன்மையான ஓலைச்சுவடிகளையும், பிற சான்றுகளையும் தமிழ் இருக்கைக் குழு ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்குத் தாரை வார்க்கப் போகிறது. இது போன்ற குற்றச்சாட்டுகள் இன்றைய நவீனத் தொழில் நுட்ப உலகில் பொய்களாகப் பரப்பக்கூட தகுதியில்லாத சிறுபிள்ளைத்தனமானவை. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் போது இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களும், சிற்றரசுகளும் தமக்குள் சண்டையிட்டு இந்தியா என்ற ஒரு நாடே முழுமையாக ஏற்படாமல் இருந்த பொழுது கிழக்கிந்திய வணிக நிறுவனம் இந்தியாவிலிருந்து பல்வகையான தொல்பொருட்களைக் கொள்ளை கொண்டு போனது பழைய வரலாறு. ஆனால் இப்பொழுது இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி நிலவுகிறது. வெளிப்படைத் தன்மையுடனும், ஊடக வெளிச்சங்களுடனும் இயங்கும் மக்களாட்சிகளில் இதுபோன்ற திருட்டுகளை எந்த நிறுவனமும் நாடும் செய்ய இயலாது. தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் இருக்கும் ஓலைச்சுவடிகளுக்கோ, அல்லது வேறு சான்றுகளுக்கோ தமிழ் இருக்கை குழுவுக்கும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்கும் எந்தவிதமான தொடர்புகளும், ஒப்பந்தங்களும் இல்லை. தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பாக ஏற்படுத்தப்படும் உடன்படிக்கைகள் அனைத்தும் எங்களது இணையதளத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே இதுபோன்ற ஆரம்பகட்ட ஆவணங்களை இணையதளத்தில் வெளிப்படையாக வைத்துள்ளோம். தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பொருள் மதிப்பில்லை என்ற ஒரே காரணத்தினால் கேட்பாரற்று விடப்பட்டுள்ள எத்தனையோ சான்றுகளையும், நூல்களையும் அவற்றை தம்செலவில் இந்தியாவிலேயே ஆவணப்படுத்தி காப்பதற்கு உதவியுள்ளன பல மேற்கத்தியப் பல்கலைக் கழகங்கள். எடுத்துகாட்டாக, 1994ல் சென்னையில் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் ஏற்படுத்த உதவிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தைச் சொல்லலாம் (https://www.lib.uchicago.edu/e/su/southasia/about-rmrl.html). ’ரோஜா’ முத்தையா என்ற தனிமனிதர் தம்மிடம் சேர்த்து வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான நூல்களும், ஆவணங்களும், 1992 ஆம் ஆண்டு அவர் இறந்தபோது வீணடிக்கப்படும் சூழலை அறிந்து அவற்றைப் பெற்று சென்னையிலேயே ஒரு நூலகத்தை ஏற்படுத்தியது சிகாகோ பல்கலைக் கழகம். மேலும் அவற்றை எண்ணிமப்படுத்தி (digitize) உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள உதவியிருக்கிறது. எனவே ஓலைச்சுவடிகளை மேற்கத்திய பல்கலைக் கழகங்கள் திருடிக்கொண்டு போகும் என்பதைப் போன்ற வதந்திகள் எந்த அடிப்படையுமில்லாதவை மட்டுமல்ல, தொன்மையான தமிழ் வரலாற்றுச் சான்றுகள் யாருக்கும் பயன்படாமல் மேலும் வீணடிக்கப் படுவதற்கு அடிப்படையாக இருக்கப்போகின்றன. மேற்கண்ட வாதங்களின் அடிப்படையில் தமிழ் இருக்கைக் குழு எம்முடைய நன்கொடையாளர்களையும் ஆதரவாளர்களையும் நாங்கள் வேண்டிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்களுடைய தமிழ்ப்பற்றையும் உணர்வையும் மிகநன்கு புரிந்து கொண்ட நாங்கள் அவற்றுக்கு உண்மையாக இருப்பது மட்டுமல்லாமல், நமக்கெதிராக பரப்பப்படும் கருத்துகளையும் கூட அவற்றின் மெய்ப்பொருள் அறிந்து எம்முடைய தொடர்ந்த செயல்பாடுகளில் கவனமாகக் கையாளுவோம் என்று உறுதியளிக்கிறோம். நீங்களும் வீண்வதந்திகளை அப்படியே நம்பிவிடாமல் அவற்றிற்கான சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று சீர்தூக்கிப் பார்த்து அவற்றின் பின்னாலான காரணங்களையும் ஆராய்ந்து அவற்றை எதிர்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
அறிவிப்பு
வணக்கம்!
இதுவரை பேராதரவு அளித்து நன்கொடை செலுத்திய ஒவ்வொருவருக்கும் தமிழ் இருக்கை குழு சார்பாக எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உலகெங்கும் வாழும் தமிழர்களும், அரசுகளும், அரசியலர்களும், அதிகாரிகளும் தமிழ் ஆர்வலர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், தொழில் வல்லுநர்களும் இதில் அடங்குவர். நாம் நம்முடைய இலக்கை நோக்கி மிக நெருங்கி வந்துவிட்டோம்.இப்பொழுதும் தொடர்ந்து நன்கொடைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதுவரை வங்கிக்கணக்கில் வந்துசேர்ந்துள்ள மொத்தத் தொகை எங்களுடைய இணையதளத்தில் (https://harvardtamilchair.org) வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் இறுதியானதும், அதிகாரபூர்வமானதும் ஆகும். செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் வேறு தகவல்கள் எல்லாமே வாக்குறுதிகளின் அடிப்படையில் வெளியிடப்படும் ஊகங்களே. ஒருவேளை 6 மில்லியன் அமெரிக்க வெள்ளிகளுக்கும் மேலாக நன்கொடைகள் எங்களை வந்தடைந்தால், கூடுதலான தொகை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் தொடர்பான பயனுள்ள வேறு சில செயல்பாடுகளுக்கே பயன்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறோம். மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அவர்களது வங்கிக்கணக்குக்கு நேரடியாக வங்கிகள் வாயிலாக அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. நன்கொடையாளர் பெயர்களை வங்கி வாயிலாக அனுப்பப்படும் தொகைகளோடு 100% சரியாகப் பொருத்திய பின்னரே வெளியிடப்படுகிறது. இதனால் ஏற்படும் தாமதத்தின் காரணமாக இதைத் தவிர்க்குமாறு ஹார்வர்டு பல்கலைக்கழகம் வேண்டுகோள் வைத்துள்ளது. அதனால் மேற்கொண்டு நன்கொடை செலுத்துபவர்கள் பின்வரும் வழிகளில் மட்டுமே பணத்தை அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
Announcement
Tamil Chair Inc. would like to thank everyone who donated so far to make the Harvard Tamil Chair a reality. The donors include Tamils living in every part of the world, Tamil Nadu government, Tamil political parties and leaders, Tamil enthusiasts, teachers and scholars, Tamil school children, business patrons and bureaucrats. We are almost close to our mission. We are still receiving donations from various sources. Only our website (https://harvardtamilchair.org) has the latest & authorized update on the total funds received in the bank for Harvard Tamil Chair. Any other amount mentioned in the news or social media typically reflects speculations based on pledges. In case we receive little more than $6 Million, the excess funds would be still spent on activities related to Tamil in Harvard University.Due to the donor name reconciliation issues & potential delays, Harvard University no longer recommends sending wire transfers to their bank account. Hence Tamil Chair Inc. recommends only the following methods to send donations in USD.
Payment in Dollars to "Tamil Chair Inc." by Check:
Check payable to: "Tamil Chair Inc."
Mail to: Kumar Kumarappan Treasurer, Tamil Chair Inc.
44348 Arapaho Ave, Fremont, CA 94539 (Only US and Canadian checks.)
Online Payment in Dollars to "Tamil Chair Inc." by Credit Card: Use the Paypal option in this website.
The Board
Tamil Chair Inc.
Tamil Chair at Harvard University
“We are very pleased to convey to you our desire to support the establishment of the first Sangam Professorship in Tamil Studies at Harvard University. We are thrilled to work with the Tamil community towards this shared goal. This effort will require a total commitment of $6 million”.
In News Media
Statement by Prof. David Shulman
Its literary tradition is among the finest in human civilization, encompassing marvelous love poetry, epic, philosophical texts, the reflexive sciences of grammar, logic, and poetics, historiography, and an enormous religious literature. An infrastructure for Tamil already exists at Harvard; a chair in Tamil will formalize this humanistic field there and impact upon the study of South Asian civilization in other major academic centers throughout the world.
A great university that offers deep study of Chinese, Arabic, Greek, Hebrew, Persian, and many other critically important languages should find a place for Tamil, which belongs in this prestigious series. In a period when chairs in Tamil studies are endangered in several important universities, for the usual reasons, the creation of a Chair for Tamil at Harvard would be a signal to the academic world that south Indian civilization matters, and that Tamil itself merits the depth of scholarly interest that Harvard, perhaps more than any other institution, can provide.
Infographics
Why Tamil Chair?
Why Harvard for Tamil Chair?
Harvard Tamil Chair
First Sangam Professorship in Tamil Studies at Harvard University
What is
Tamil chair?Effort to promote the significance of Tamil language studies
Need for a
Tamil chair?To represent a great prestige for Tamil in Harvard University
Why at
Harvard?Harvard provides a great opportunity for Tamil scholars
Benefits of
Tamil chair?Tamil language’s legacy to survive and grow.